Sep 4, 2026
Thisaigal NewsYouTube
சுக்பிட் 2026: பல்கலைக்கழகத்துக்காக தங்கம் வென்ற மலேசிய நட்சத்திர வீரர்!
விளையாட்டு

சுக்பிட் 2026: பல்கலைக்கழகத்துக்காக தங்கம் வென்ற மலேசிய நட்சத்திர வீரர்!

Share:

கோலாலம்பூரில் சமீபத்தில் நடைபெற்ற சுக்பிட் 2026 உயர்கல்வி நிறுவனங்களுக்கான விளையாட்டுப் போட்டியில், மலேசியாவின் குண்டு எறிதல் வீரர் ஜோனா சாங் ரிகன், மலாயா பல்கலைக்கழகத்துக்காக தங்கப் பதக்கம் வென்றார்.

ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 18.22 மீட்டர் தூரம் எறிந்து, போட்டியின் சாதனையை இரண்டு முறை முறியடித்தார்.

தேசிய சாதனையை முறியடிப்பது தனது நோக்கமல்ல என்றும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பல்கலைக்கழகத்துக்காக விளையாடி மகிழ வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் ஜோனா தெரிவித்தார்.

எனினும், வட்டு எறிதல் போட்டியில் சக வீரர் கமால் ஃபர்ஹானிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

காலில் காயம் ஏற்பட்ட பிறகும், மீண்டும் துணிச்சலுடன் களமிறங்கி விளையாடினார் ஜோனா. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஆசியான் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் தனது சிறந்த திறனை வெளிப்படுத்துவதுடன், தேசிய சாதனையையும் மேம்படுத்த இலக்கு வைத்துள்ளார்.

Related News