Sep 15, 2026
Thisaigal NewsYouTube
3-வது தங்கம் வென்ற நபிலா; சகோதரியின் சாதனையை நெருங்குகிறார்
விளையாட்டு

3-வது தங்கம் வென்ற நபிலா; சகோதரியின் சாதனையை நெருங்குகிறார்

Share:

சிலாங்கூரில் நடைபெற்றுவரும் சுக்மா விளையாட்டுப் போட்டியில், கெடா அணியின் சைக்கிள் வீராங்கனை நூருல் நபிலா அஸ்ரி, பெண்களுக்கான 90 கிலோமீட்டர் ரோடு ரேஸில் தங்கம் வென்றார்.

இதன் மூலம் இந்தப் போட்டியில் அவர் தனது 3-வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். 2 மணி நேரம், 2 நிமிடம், மற்றும் 9 விநாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து, ஜோகூரின் இன்தான் சூரயா வெள்ளியும், கெடா அணியின் ஸஹ்ரா அஃபிபா வெண்கலமும் வென்றனர்.

பந்தயத்தின்போது அணித்தோழி விபத்தில் சிக்கியதால், கெடா அணிக்கு கடும் சவால் ஏற்பட்டதாக நபிலா தெரிவித்தார்.

இதற்கு முன்பு பெண்களுக்கான கிரிட்டீரியம் மற்றும் மவுண்டன் பைக் போட்டிகளிலும் அவர் தங்கம் வென்றிருந்தார்.

இனி வார இறுதியில் நீலை தேசிய வெலோட்ரோமில் நடைபெறும் டிராக் போட்டிகளில் நபிலா பங்கேற்கிறார்.

Related News