Sep 12, 2026
Thisaigal NewsYouTube
அதிரடி பாணி: "பெர்னாண்டஸுக்கு வலைவீசும் மான்செஸ்டர் சிட்டி! பரபரப்பு
விளையாட்டு

அதிரடி பாணி: "பெர்னாண்டஸுக்கு வலைவீசும் மான்செஸ்டர் சிட்டி! பரபரப்பு

Share:

அர்ஜென்டினா மிட்ஃபீல்டர் என்சோ பெர்னாண்டஸை ஒப்பந்தம் செய்ய மான்செஸ்டர் சிட்டிக்கு செல்சி நாளை மாலை 5 மணி வரை கெடு விதித்துள்ளது.

25 வயதான பெர்னாண்டஸை விற்க, 120 மில்லியன் பவுண்ட், அதாவது சுமார் 661 கோடி ரூபாய், செலுத்த வேண்டும் என செல்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இல்லையெனில் அவர் செல்சியிலேயே தொடர்வார்.

சிட்டி, ரோட்ரி வெளியேறினால் அவருக்கு மாற்றாக பெர்னாண்டஸை இலக்காகக் கொண்டுள்ளது. ரோட்ரியை பார்சிலோனா விரும்பும் நிலையில், சிட்டி ஆரம்ப 55 மில்லியன் பவுண்ட் சலுகையை நிராகரித்துள்ளது.

பெர்னாண்டஸ் வெளியேறினால், செல்சி போர்ன்மத்தின் அலெக்ஸ் ஸ்காட்டை மாற்று வீரராக பரிசீலிக்கிறது. இதனிடையே, சிட்டி செல்சியின் மாலோ குஸ்டோவையும் கண்காணித்து வருகிறது.

Related News