Aug 8, 2026
Thisaigal NewsYouTube
வியட்நாம் கராத்தே போட்டி: பதக்கம் வென்ற கெடா மாநில வீரர்களுக்குக் கூலிமில் பாராட்டு விழா
விளையாட்டு

வியட்நாம் கராத்தே போட்டி: பதக்கம் வென்ற கெடா மாநில வீரர்களுக்குக் கூலிமில் பாராட்டு விழா

Share:

வியட்நாமில் நடைபெற்ற SEAKF ( சியாகாஃப்) எனப்படும் தென்கிழக்கு ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கெடா மாநிலத்தைப் பிரதிநிதித்துப் பங்கேற்று வெற்றி பெற்ற நான்கு வீரர்களுக்கு, மாசிலா குழுமம் சார்பில் சிறப்புப் பாராட்டு விழா நடத்திக் கௌரவிக்கப்பட்டது.

இவ்விழா கூலிம், தாமான் செலாசேவில் உள்ள 'YES HIGHLAND' உணவகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் தலைவர் யாதவன் ஒருங்கிணைப்பில், எஸ். தோமஸ் ஆலோசனையின் கீழ் குழுமத்தின் இதர உறுப்பினர்களின் முழு ஆதரவோடு இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போட்டியில் பதக்கங்களை வென்று நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்த நான்கு கராத்தே வீரர்களுக்கும் ரொக்கப் பரிசு மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டது.

இப்போட்டியில் மலேசியப் பிரதிநிதிகள் ஒட்டுமொத்தமாக 6 தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றி சாதனைப் படைத்தனர். அதில், கெடா மாநிலத்தைச் சேர்ந்த வீரர் முகமாட் அமார் பின் சிரஜிடின் ஒரு தங்கப் பதக்கத்தையும், மோனிஷா யாயாடி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். மேலும், அர்ஜூன் கண்ணா மற்றும் தர்நேஸ் சங்கர் ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளனர்.

இப்போட்டியின் முதன்மைப் பயிற்றுனராக மாஸ்டர் ஷியான் சுரேஸ் குமாரும், துணைப் பயிற்றுனராக மாஸ்டர் கோமகனும் செயல்பட்டனர். இப்போட்டி குறித்துத் துணைப் பயிற்றுனர் மாஸ்டர் கோமகன் கூறுகையில், கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை வியட்நாமில் நடைபெற்ற இந்த SEAKF சாம்பியன்ஷிப் போட்டியானது, உலகளவிலான முக்கிய கராத்தே போட்டிகளில் ஒன்றாகும் என்றார். இம்முறை நடைபெற்ற போட்டியில் 11 நாடுகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் களம் இறங்கிய வேளையில், மலேசியாவைப் பிரதிநிதித்து கெடா மாநிலத்திலிருந்து 8 வீரர்கள் பங்கேற்றனர் என்று மாஸ்டர் கோமகன் விவரித்தார்.

இப்போட்டியில் மலேசியப் பிரதிநிதிகள் ஒட்டுமொத்தமாக 6 தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றி சாதனைப் படைத்தனர். அதில், கெடா மாநிலத்தைச் சேர்ந்த வீரர் முகமாட் அமார் பின் சிரஜிடின் ஒரு தங்கப் பதக்கத்தையும், மோனிஷா யாயாடி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். மேலும், அர்ஜூன் கண்ணா மற்றும் தர்நேஸ் சங்கர் ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளனர்.

தங்கப் பதக்கத்தை வென்ற முஹமட் அமார் பின் சிரஜிடின் கூறுகையில் மாஸ்டர் சுரேஷ் மற்றும் மாஸ்டர் கோமகனின்றி இந்த சாதனையைப் தம்மால் படைத்திருக்க முடியாது என்றார்.

வெள்ளிப் பதக்கத்தை வென்று கெடா மாநிலத்திற்கு பெருமை சேர்த்த மோனிஷா யாயாடி இவ்வாறு விவரித்தார்.

கூட்டாக இணைந்து வெண்கலப் பதக்கத்தை வென்ற தர்நேஸ் சங்கர் மற்றும் அர்ஜூன் கண்ணா ஆகியோர் தங்களின் அடைவு நிலை குறித்து இவ்வாறு விவரித்தனர்.

2018 ஆம் ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட மாசிலா குழுமம், சியாக்காப் போட்டியில் வெற்றி பெற்ற கெடா மாநில விளையாட்டாளர்களை கெளரவிப்பதில் பெருமிதம் கொள்வதாக அதன் பாராட்டு விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவர் எஸ். தோமஸ் தெரிவித்தார்.

கெடா மாநிலத்தைப் பிரதிநிதித்துச் சென்று இமாலய சாதனை படைத்த இவ்வீரர்களின் வெற்றியைப் பாராட்டி, கௌரவித்த மாசிலா குழுமம் அமைப்புக்குக் கராத்தே குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

Related News

நிதி இல்லை என்றாலும் சாதிப்போம்: சுக்மா 2026 போட்டிகளை நடத்த சிலாங்கூர் அதிரடி முடிவு

நிதி இல்லை என்றாலும் சாதிப்போம்: சுக்மா 2026 போட்டிகளை நடத்த சிலாங்கூர் அதிரடி முடிவு

இந்தோனேசியாவின் உலக பூ பந்து  சாம்பியன்ஷிப் பங்கேற்பில் மீது சந்தேகம்

இந்தோனேசியாவின் உலக பூ பந்து சாம்பியன்ஷிப் பங்கேற்பில் மீது சந்தேகம்

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் மலேசியா வரலாற்றுச் சாதனை: 8 தங்கம் வென்று அசத்தல்

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் மலேசியா வரலாற்றுச் சாதனை: 8 தங்கம் வென்று அசத்தல்

தைவான் பொது பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் பியர்லி - தினா ஜோடி தோல்வி; உலக சாம்பியன்ஷிப் தொடருக்குத் தயாராவதாகப் பியர்லி தன் உறுதி

தைவான் பொது பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் பியர்லி - தினா ஜோடி தோல்வி; உலக சாம்பியன்ஷிப் தொடருக்குத் தயாராவதாகப் பியர்லி தன் உறுதி

எடைதூக்கும் விளையாட்டின் வளர்ச்சிக்கு ஆண்டுதோறும்  மில்லியன் நிதி ஒதுக்கீடு

எடைதூக்கும் விளையாட்டின் வளர்ச்சிக்கு ஆண்டுதோறும் மில்லியன் நிதி ஒதுக்கீடு

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அமீர் டேனியலுக்கு பிரதமர் அன்வார் வாழ்த்து

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அமீர் டேனியலுக்கு பிரதமர் அன்வார் வாழ்த்து