Aug 25, 2026
Thisaigal NewsYouTube
அலிஸ்ஸாவின் அடுத்த இலக்கு: ஆசிய விளையாட்டு, உலக சாம்பியன்ஷிப்”
விளையாட்டு

அலிஸ்ஸாவின் அடுத்த இலக்கு: ஆசிய விளையாட்டு, உலக சாம்பியன்ஷிப்”

Share:

சிலாங்கூர் சுக்மா போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தேசிய சைக்கிள் வீராங்கனை நூர் அலிஸ்ஸா ஃபாரிட், அடுத்ததாக ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளார்.

ஜோகூர் அணிக்காக தங்கம் வெல்லும் முக்கிய வீராங்கனையாக களமிறங்கிய 20 வயதான அலிஸ்ஸா, தனது கடைசி சுக்மா போட்டியில் சைக்கிள் பந்தயத்தின் கீரின் மற்றும் தனிநபர் வேகப் பந்தயப் பிரிவுகளில் தங்கம் வென்றார்.

ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் உலக சாம்பியன்ஷிப்பில் உலகின் முன்னணி வீராங்கனைகளை எதிர்கொள்ள உள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்களை எதிர்கொள்ளும் வகையில் வேகத்தை அதிகரிப்பதுடன், போட்டியின்போது பதற்றத்தை கட்டுப்படுத்தி கவனத்தை மேம்படுத்தவும் பயிற்சி செய்து வருவதாக அலிஸ்ஸா கூறினார்.

சுக்மாவில் ஆண்களுக்கான கீரின் மற்றும் தனிநபர் ஸ்பிரிண்ட் பிரிவுகளில் சரவாக்கின் அடிப் அந்தார் அந்தான் தங்கம் வென்றார்.

Related News