நடைபெற்று வரும் சுக்மா 2026 போட்டியில், சிலாங்கூர் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றால், மாநிலத்திற்கு சிறப்பு விடுமுறை அறிவிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என சிலாங்கூர் மாநில அரசு தெரிவித்துள்ளது.
மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் குழுத் தலைவர் முகமட் நஜ்வான் ஹலிமி கூறுகையில், பதக்கப் பட்டியல் இறுதியான பின்னரே இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் கிடைத்தால், மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியிடம் சிறப்பு விடுமுறை வழங்கும் பரிந்துரை முன்வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று பிற்பகல் 2.50 மணி நிலவரப்படி, சிலாங்கூர் 85 தங்கப் பதக்கங்களுடன் முன்னிலை வகிக்கிறது.
போட்டி நிறைவடைய இன்னும் ஒன்றரை நாட்களே உள்ளதால், வீரர்கள் முழு கவனத்துடன் சிறப்பாகப் போராட வேண்டும் என்றும் நஜ்வான் கேட்டுக் கொண்டார்.








