Aug 22, 2026
Thisaigal NewsYouTube
லீ சோங் வெய்யின் ரசிகரிலிருந்து சுக்மா தங்கம் வரை: எர்ஃபானின் வெற்றிப் பயணம்
விளையாட்டு

லீ சோங் வெய்யின் ரசிகரிலிருந்து சுக்மா தங்கம் வரை: எர்ஃபானின் வெற்றிப் பயணம்

Share:

பள்ளி பருவம் எதிர்காலத்தை மாற்றும் என்பதற்கு தேசிய மற்றும் கூட்டாட்சிப் பிரதேச பூ பந்து வீரர் எர்ஃபான் மஜீத் ஹாஜிபெய்கி சிறந்த உதாரணமாக திகழ்கிறார்.

19 வயதான எர்ஃபான், உயர்நிலைப் பள்ளியில் சேரும்போது கால்பந்து மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், தனது பள்ளியில் முன்னாள் உலகின் புகழ்பெற்ற வீரரான டத்தோ ஸ்ரீ லீ சோங் வெய் பயிற்சி பெற்றதை அறிந்ததும் பூ பந்து விளையாட்டின் பக்கம் திரும்பினார்.

செத்தியா சிட்டி கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற சுக்மா ஆண்கள் அணிப் போட்டியில், பினாங்கை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்ற கூட்டாட்சிப் பிரதேச அணியில் எர்ஃபானும் முக்கிய பங்காற்றினார். அவர் டான் கீன் வெயை 21-17, 11-21, 24-22 என்ற கணக்கில் வென்றார்.

உலகத் தரவரிசையில் தற்போது 218-வது இடத்தில் உள்ள எர்ஃபான், கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, பேஸ்பால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பெற்ற அனுபவம், பூ பந்து விளையாட்டுக்கு மாற உதவியதாகக் கூறினார்.

கால்பந்தில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக, நீண்ட கால நலனைக் கருத்தில் கொண்டு பூ பந்து விளையாட்டை தேர்வு செய்ததாகவும் அவர் பெருமையோடு தெரிவித்தார்.

முன்னதாக ஏற்பட்ட முழங்கால் காயத்தால், போட்டிகளுக்குப் பிறகு இன்னும் வலி இருப்பதாகவும், அதிக ஓய்வும் மீட்பு பயிற்சியும் தேவைப்படுவதாகவும் எர்ஃபான் கூறினார்.

தனிநபர் ஒற்றையர் பிரிவில் தோல்வியடைந்தாலும், அறிமுக சுக்மாவில் தங்கம் வென்றது எதிர்காலப் போட்டிகளுக்கு தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News