ஆசிய கோப்பை இறுதிப் போட்டி நேற்று கொழும்பில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இலங்கை 50 ரன்னில் சுருண்டது. பின்னர், இந்தியா விக்கெட் இழப்பின்றி சேஸிங் செய்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
100 ஓவர்கள் கொண்ட இந்த போட்டி 21.3 ஓவர்களிலேயே முடிவடைந்தது. போட்டி முன்னதாகவே முடிந்த நிலையில், இந்திய வீரர்கள் உடனடியாக இந்தியா திரும்பினர். அவர்கள் இன்று காலை மும்பையில் உள்ள கலினா விமான நிலையம் வந்தடைந்தனர். அதன்பின், சொகுசு காரில் தங்களது வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.