Sep 21, 2026
Thisaigal NewsYouTube
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: ஜஸ்டின் ஹோ, மகளிர் இரட்டையர் ஜோடி தோல்வியால் மலேசியாவின் சவால் நிறைவு
விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: ஜஸ்டின் ஹோ, மகளிர் இரட்டையர் ஜோடி தோல்வியால் மலேசியாவின் சவால் நிறைவு

Share:

ஆஸ்திரேலிய பொது ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிச் சுற்றில், மலேசியாவின் ஆடவர் ஒற்றையர் பிரிவு வீரர் ஜஸ்டின் ஹோ மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவு ஜோடியான லோ ஸி யூ - நோராகிலா மைசரா ஜோடி தோல்வியடைந்து வெளியேறியதை அடுத்து, இத்தொடரில் மலேசியாவின் சவால் முடிவுக்கு வந்துள்ளது.

ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் மலேசியாவின் ஜஸ்டின் ஹோ, இந்தோனேசியாவின் முகமட் ஜாகி உபைதில்லாவிடம் 7-21, 13-21 என்ற நேர் செட்களில் 38 நிமிடங்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். அதேபோல, மகளிர் இரட்டையர் பிரிவிலும் மலேசிய ஜோடி தோல்வியைத் தழுவியதால், ஆஸ்திரேலிய ஓபனில் மலேசிய அணியின் பயணம் முழுமையாக நிறைவடைந்தது.

Related News