Jul 18, 2026
Thisaigal NewsYouTube
14 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவுக்கு பெருமை சேர்த்த சிவசங்கரி /  பிஎஸ்ஏ ஸ்குவாஷ் டூர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்
விளையாட்டு

14 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவுக்கு பெருமை சேர்த்த சிவசங்கரி / பிஎஸ்ஏ ஸ்குவாஷ் டூர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்

Share:

மலேசியாவைச் சேர்ந்த நட்சத்திர விராங்கணையான எஸ். சிவசங்கரி, பிஎஸ்ஏ ஸ்குவாஷ் டூர் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் மலேசிய பெண் வீராங்கனையாக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு மலேசிய ஸ்குவாஷ் ஜாம்பவான் நிக்கோல் டேவிட் இறுதிப்போட்டியை எட்டியதன் பின்னர், 14 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவுக்கு இந்த முக்கிய சாதனையை சிவசங்கரி மீண்டும் பெற்றுத் தந்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று மாலை நடைபெற்ற பரபரப்பான அரையிறுதிப் போட்டியில், முதல் நிலை வீராங்கனையான எகிப்தின் அமினா ஒர்ஃபிவை வீழ்த்தி சிவசங்கரி வெற்றி வாகை சூடினார்.

இந்நிலையில், நான்காம் நிலை வீராங்கனையாக களமிறங்கிய சிவசங்கரி, இன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் எகிப்தின் இரண்டாம் நிலை வீராங்கனையான ஹனியா எல் ஹமாமிஐ எதிர்கொள்கிறார்.

இருவருக்கும் இடையிலான முந்தைய நேருக்கு நேர் மோதல்களின் புள்ளிவிவரங்கள் ஹனியா எல் ஹமாமிக்கு சாதகமாக உள்ளன.

இதுவரை, ஹனியா எல் ஹமாமிவை எதிர்கொண்ட 10 போட்டிகளில், சிவசங்கரி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

என்றாலும், சமீபத்திய சிறப்பான ஆட்டத்திறன் மற்றும் அரையிறுதியில் முதல் நிலை வீராங்கனையை வீழ்த்திய நம்பிக்கையுடன், இறுதிப்போட்டியில் சிவசங்கரி வலுவான சவாலை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

உலகக்கோப்பை கால்பந்து: ஃபாக்லாந்து தீவுகள் தொடர்பான பதாகை விவகாரம் - அர்ஜென்டினா மீது விசாரணை நடத்த ஃபிஃபா முடிவு

உலகக்கோப்பை கால்பந்து: ஃபாக்லாந்து தீவுகள் தொடர்பான பதாகை விவகாரம் - அர்ஜென்டினா மீது விசாரணை நடத்த ஃபிஃபா முடிவு

உலகக்கோப்பை இறுதிப்போட்டி: மெஸ்ஸியின் தாக்குதலை முறியடிக்க ஸ்பெயின் அணியின் வலுவான தற்காப்பு அரண் தயார்!

உலகக்கோப்பை இறுதிப்போட்டி: மெஸ்ஸியின் தாக்குதலை முறியடிக்க ஸ்பெயின் அணியின் வலுவான தற்காப்பு அரண் தயார்!

உலகக்கோப்பை கால்பந்து: இங்கிலாந்தின் தோல்விக்கு டூச்சலின் தற்காப்பு ஆட்டம் தான் காரணமா? - டொனால்ட் டிரம்ப் விமர்சனம்

உலகக்கோப்பை கால்பந்து: இங்கிலாந்தின் தோல்விக்கு டூச்சலின் தற்காப்பு ஆட்டம் தான் காரணமா? - டொனால்ட் டிரம்ப் விமர்சனம்

தோல்வியிலிருந்து மீளும் அர்ஜென்டினா: உலகக் கோப்பையில் எதிரணிகளை நிலைகுலைய வைக்கும் 'கம்பேக் கிங்ஸ்' ரகசியம்!

தோல்வியிலிருந்து மீளும் அர்ஜென்டினா: உலகக் கோப்பையில் எதிரணிகளை நிலைகுலைய வைக்கும் 'கம்பேக் கிங்ஸ்' ரகசியம்!

மீண்டும் உலகக் கோப்பை கனவில் மெஸ்ஸி: பத்து ஆண்டுகளுக்குப் பின் அதே மைதானத்தில் வரலாற்றுச் சாதனைக்குத் தயார்!

மீண்டும் உலகக் கோப்பை கனவில் மெஸ்ஸி: பத்து ஆண்டுகளுக்குப் பின் அதே மைதானத்தில் வரலாற்றுச் சாதனைக்குத் தயார்!

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்கிறார் டொனால்ட் டிரம்ப்: வரலாற்று நிகழ்வு

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்கிறார் டொனால்ட் டிரம்ப்: வரலாற்று நிகழ்வு