Sep 21, 2026
Thisaigal NewsYouTube
வரலாற்றுச் சாதனை: கத்தாரை வீழ்த்தி கனடா முதல் வெற்றி!
விளையாட்டு

வரலாற்றுச் சாதனை: கத்தாரை வீழ்த்தி கனடா முதல் வெற்றி!

Share:

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் கனடா அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. குரூப் பி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் கத்தார் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் கனடா வீழ்த்தியது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே சைல் லாரின் மற்றும் ஜொனாதன் டேவிட் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து கனடா அணிக்கு முன்னிலை தேடித்தந்தனர். மாற்று வீரராக களம் இறங்கிய ஜொனாதன் டேவிட் இப்போட்டியில் ஹேட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

கத்தார் அணியின் ஹோமம் அஹ்மத் மற்றும் அசிம் மடிபோ ஆகிய இரு வீரர்கள் அடுத்தடுத்து சிவப்பு அட்டை விதியால் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டதால், கத்தார் அணி 9 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்ட கனடா அணி தொடர்ந்து கோல்களை வாரிக்குவித்தது. இந்த அபார வெற்றியின் மூலம் சுவிட்சர்லாந்து அணியை விட அதிக கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று கனடா அணி தற்போது குரூப் பி பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Related News