Oct 18, 2025
Thisaigal NewsYouTube
தெற்காசிய கால்பந்து போட்டி: இந்தியா-குவைத் அணிகள் இன்று மோதல்
விளையாட்டு

தெற்காசிய கால்பந்து போட்டி: இந்தியா-குவைத் அணிகள் இன்று மோதல்

Share:

தெற்காசிய கால்பந்து போட்டி தொடரில் ‘ஏ’ பிரிவில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா-குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூரு, 14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இந்த போட்டி தொடரில் 'ஏ' பிரிவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா-குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

உலக தரவரிசையில் 101-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான் (4-0), நேபாளம் (2-0) ஆகிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி அரைஇறுதியை எட்டியது. இதேபோல் தரவரிசையில் 143-வது இடம் வகிக்கும் குவைத் அணி தனது முதல் 2 ஆட்டங்களில் நேபாளம் (3-1), பாகிஸ்தான் (4-0) அணிகளை தோற்கடித்து அரைஇறுதியை உறுதி செய்தது.

'ஏ' பிரிவில் முதலிடத்தை பிடிப்பது யார்? என்பதை நிர்ணயிக்கும் இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு நிச்சயம் கடுமையான சோதனை காத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு அழைப்பின் பேரில் வந்திருக்கும் வலுவான குவைத் அணி தனது உத்வேத்தை தொடர முழுபலத்தையும் வெளிப்படுத்தும்.

Related News