Sep 13, 2026
Thisaigal NewsYouTube
தனியார் விமானம் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் விழுந்ததில், அதில் பயணம் செய்த 11 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
உலகச் செய்திகள்

தனியார் விமானம் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் விழுந்ததில், அதில் பயணம் செய்த 11 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Share:

பஹாமஸ் தீவிலிருந்து புறப்பட்ட இந்த விமானம், ஃபுளோரிடா கடற்கரையிலிருந்து சுமார் 128 கிலோமீட்டர் தொலைவில் அட்லான்டிக் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. விபத்தின்போது விமானத்திலிருந்த அவசரச் சமிக்ஞை செயல்பட்டதால், அமெரிக்கக் கடற்காவல் படைக்குத் தகவல் கிடைத்தது.

விமானம் கடலில் விழுந்தவுடன், விமானி உட்பட 11 பயணிகளும் சிறிய அவசரக் கால மிதவைகளில் ஏறி சுமார் ஐந்து மணி நேரம் கடலில் தத்தளித்தனர். அந்தச் சமயத்தில் அப்பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ஆகாயப்படையின் மேஜர் எலிசபத் பையோவடி தலைமையிலான விமானம், உதவிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் பயணிகளுக்குத் தேவையான உணவு மற்றும் கூடுதல் மிதவைகளை வழங்கினர். பின்னர், ஹெலிகாப்டர்கள் மூலம் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். பயணிகள் அனைவரும் உயிர் தப்பியதை "அதிசயம்" என மீட்புக் குழுவினர் வர்ணித்துள்ளனர்.

Related News

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை