Aug 7, 2026
Thisaigal NewsYouTube
பிரான்சில் கொளுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ: தீ வைப்பவர்களுக்கு சகிப்புத்தன்மை காட்டப்பட மாட்டாது என அதிபர் மேக்ரான் எச்சரிக்கை
உலகச் செய்திகள்

பிரான்சில் கொளுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ: தீ வைப்பவர்களுக்கு சகிப்புத்தன்மை காட்டப்பட மாட்டாது என அதிபர் மேக்ரான் எச்சரிக்கை

Share:

காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் கருகியுள்ள நிலையில், வேண்டுமென்றே தீ வைப்பவர்கள் மீது சற்றும் சகிப்புத்தன்மை காட்டப்பட மாட்டாது என்று பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உறுதியளித்துள்ளார். மே மாதம் முதல் பிரான்சில் நிலவி வரும் கடும் வெப்ப அலைகளின் காரணமாக வறண்ட சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், வேண்டுமென்றே அல்லது கவனக்குறைவாகத் தீ வைத்ததாக நாடு முழுவதும் டஜன் கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு காட்டுத்தீயினால் சுமார் 35,000 ஹெக்டேர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2025-ஆம் ஆண்டின் முழு தீ விபத்து காலத்தை விடவும் அதிகமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பிறகு நாடு முழுவதும் இத்தனை காட்டுத்தீ சம்பவங்களை எதிர்கொண்டதில்லை என்று பாரிஸுக்கு அருகிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஃபோண்டன்புளூ காட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்ட அதிபர் மேக்ரான் கவலை தெரிவித்துள்ளார். அங்கு கடந்த ஜூலை 5 முதல் 2,000-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் காடுகள் கருகியுள்ளன. மேலும், இந்த தீ பரவியதால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 1,000 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மோட்டார் பாதை தடுப்புச் சுவரில் மேற்கொள்ளப்பட்ட பழுதுபார்க்கும் பணியின்போது ஏற்பட்ட தீப்பொறி புற்களில் பட்டு, பின்னர் காடு முழுவதும் பரவியதாகக் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த இரு ஊழியர்கள் மீது கவனக்குறைவாகத் தீ வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், வேண்டுமென்றே தீ வைத்த சந்தேகத்தின் பேரில் ஒரு தன்னார்வ தீயணைப்பு வீரர் உட்பட இருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related News

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்:  பணத்தை பாதுகாக்க சென்ற  2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்: பணத்தை பாதுகாக்க சென்ற 2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு

நடிகை திரிஷா குறித்து அவதூறு பேச்சு: உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் அதிரடி கைது

நடிகை திரிஷா குறித்து அவதூறு பேச்சு: உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் அதிரடி கைது

லேண்டிங் கியர் கோளாறு: பிலிப்பைன்ஸில் ஏர்ஏசியா விமானம் அவசரமாக ரத்து!

லேண்டிங் கியர் கோளாறு: பிலிப்பைன்ஸில் ஏர்ஏசியா விமானம் அவசரமாக ரத்து!

பசிபிக் தீவு நாடான நவுரு தனது பாரம்பரியப் பெயரான 'நவோரோ' என அதிகாரப்பூர்வமாக மாற்றம்

பசிபிக் தீவு நாடான நவுரு தனது பாரம்பரியப் பெயரான 'நவோரோ' என அதிகாரப்பூர்வமாக மாற்றம்