Sep 13, 2026
Thisaigal NewsYouTube
வியட்நாமில் 11 மில்லியன் டாலர் வைரக் கடத்தல் கும்பல் அம்பலம்: நாட்டின் மிகப்பெரிய நகை நிறுவனம் சிக்கியதால் பரபரப்பு
உலகச் செய்திகள்

வியட்நாமில் 11 மில்லியன் டாலர் வைரக் கடத்தல் கும்பல் அம்பலம்: நாட்டின் மிகப்பெரிய நகை நிறுவனம் சிக்கியதால் பரபரப்பு

Share:

வியட்நாமின் மிகப்பெரிய நகை நிறுவனமான 'பூநியூவான் ஜூவல்லரி' நிறுவனத்தின் முன்னாள் துணைப் பிரிவு தலைவர் உட்பட 30-க்கும் மேற்பட்டோர், பல மில்லியன் டாலர் மதிப்புள்ள சர்வதேச வைரக் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 11 மில்லியன் அமெரிக்க டாலர் ஏறத்தாழ 28,000 வைரங்கள் மதிப்புள்ள வைரங்களைக் கடத்தியதாகக் கூறப்படும் இந்த சர்வதேச கும்பல் குறித்து வியட்நாம் நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹோ சி மின் நகரில் உள்ள வீடுகள் மற்றும் நகைக்கடைகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், முறையான ஆவணங்கள் இல்லாத 1,239 வைரங்கள் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 'PNJ' நிறுவனத்தின் ரத்தினக்கல் சான்றளிப்புத் துறையின் முன்னாள் இயக்குநரான டாங் நகோக் தாவ், இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட வைரங்களுக்கு வியட்நாமில் சட்டவிரோதமாக மறுவிற்பனை செய்ய ஏதுவாக போலியான சான்றிதழ்களை வழங்கியதாகவும், அவற்றின் லேசர் குறியீடுகளை நீக்கிவிட்டுத் தங்கள் நிறுவனத்தின் குறியீடுகளைப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து ஹாங்காங் வழியாக வியட்நாமிற்கு மிகவும் அதிநவீன குற்றவியல் உத்திகளைப் பயன்படுத்தி இந்த வைரங்கள் கடத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோசடி விவகாரம் வெளியானதை அடுத்து, வியட்நாமின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 'PNJ' நிறுவனத்தின் பங்குகள் 25 சதவீதத்திற்கும் மேல் சரிவைச் சந்தித்துள்ளன.

Related News

வியட்நாமில் 11 மில்லியன் டாலர் வைரக் கடத்தல் கும்பல் அம்ப... | Thisaigal News