Sep 13, 2026
Thisaigal NewsYouTube
இந்தியாவில் முதல்முறையாக கருணைக் கொலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
உலகச் செய்திகள்

இந்தியாவில் முதல்முறையாக கருணைக் கொலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

Share:

கடந்த 13 ஆண்டுகளாக சுயநினைவின்றி போராடி வரும் 31 வயது இளையரான ஹரீஷ் ராணா என்பவரைக் கருணைக் கொலை செய்ய டெல்லி உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரீஷ், கடந்த 2013-ஆம் ஆண்டு, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி படித்து வந்த போது, அவ்விடுதியின் நான்காவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதில் அவரது மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, கடந்த 13 ஆண்டுகளாக சுயநினைவின்றி தாவரம் போன்ற நிலையில், இருந்து வந்தார்.

இந்நிலையில், தங்கள் மகனுக்குப் பொருத்தப்பட்டுள்ள செயற்கை சுவாசக் கருவிகளை அகற்றி, கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி அவரது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

இதனையடுத்து, அவர்களது கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், ஹரீஷின் செயற்கை சுவாசக் கருவிகளை அகற்ற அனுமதி வழங்கியது.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை