Oct 20, 2025
Thisaigal NewsYouTube
பூமிக்கு பெரும் அச்சுறுத்தல்.. பூமியை நோக்கி வரும் கோள்.. நாசா வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!
உலகச் செய்திகள்

பூமிக்கு பெரும் அச்சுறுத்தல்.. பூமியை நோக்கி வரும் கோள்.. நாசா வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

Share:

நாசா, ஜுன் 29-

மேரிலாந்தில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் அப்ளைடு இயற்பியல் ஆய்வகத்தில் ஜூன் 20ஆம் தேதி இது தொடர்பான நிகழ்ச்சியை நாசா ஏற்பாடு செய்தது. இதன்போதே இந்த விஷயம் தெரியவந்துள்ளது. இன்னும் 14 ஆண்டுகள் உள்ளதால், அதைத் தவிர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது

விண்வெளியில் இலக்கின்றி சுற்றும் சிறுகோளால் பூமி பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது என்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். ஒரு சிறுகோள் பூமியை நோக்கிச் செல்வதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஜூலை 12, 2038 அன்று பூமியைத் தாக்கும் ஒரு சிறுகோள் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். அதன் அளவு இன்னும் தெரியவில்லை.

ஆனால் பூமியைத் தாக்கும் அச்சுறுத்தல் 72 சதவீதம் ஆகும். தற்போது, ​​இந்த அச்சுறுத்தலைத் தவிர்க்க நாசாவிடம் எந்த வழியும் இல்லை, என்றார். விண்வெளியில் உள்ள சிறுகோள்களால் நமது பூமிக்கு ஏற்படும் அச்சுறுத்தலை மதிப்பிடுவதற்கும் அச்சுறுத்தலைத் தவிர்ப்பதற்கும் விஞ்ஞானிகள் இரட்டை சிறுகோள் திசைதிருப்பல் சோதனை இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்

இந்த பணியின் மூலம் பூமிக்கு ஏற்படும் அச்சுறுத்தல் முதலில் கண்டறியப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கடந்த ஆண்டு (2023) ஏப்ரலில், நாசா விஞ்ஞானிகள் இருபதாண்டுகளுக்கு ஒருமுறை பிளானட்டரி டிஃபென்ஸ் இன்டராஜென்சி டேபிள் டாப் பயிற்சியை மேற்கொண்டனர். தற்போது இந்த சிறுகோள்களால் பூமிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.

ஆனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறுகோள்களை எதிர்கொள்ள தயாராகும் வகையில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேரிலாந்தில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் அப்ளைடு இயற்பியல் ஆய்வகத்தில் ஜூன் 20ஆம் தேதி இது தொடர்பான நிகழ்ச்சியை நாசா ஏற்பாடு செய்தது.

Related News