Sep 13, 2026
Thisaigal NewsYouTube
கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை
உலகச் செய்திகள்

கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

Share:

கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் இண்டஸ்ட்ரியல் பகுதியில் உள்ள பர்சான் உள்ளூர் எரிவாயு விநியோக நிலையத்தில் நேற்று மாலை செயல்பாடுகள் தொடங்கப்பட்டபோது ஏற்பட்ட தொழில்நுட்ப விபத்தினால் வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் 54 பேர் காயமடைந்துள்ளதுடன், 18 பேர் மாயமாகியுள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எவ்வித கசிவும் ஏற்படவில்லை என்று கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கத்தார் இன்டர்நேஷனல் சர்ச் அண்ட் ரெஸ்க்யூ குரூப் மற்றும் சிவில் டிஃபென்ஸ் குழுவினர் இணைந்து மாயமான 18 பேரையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ராஸ் லஃப்பான் பகுதிக்குத் தெற்கே அமைந்துள்ள தலைநகர் தோஹா வரை இந்த வெடிச்சத்தம் மிகவும் பலமாகக் கேட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கத்தார் எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News