Sep 12, 2026
Thisaigal NewsYouTube
“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு
உலகச் செய்திகள்

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

Share:

“என் சகோதரர்” என அன்புடன் கூறிய படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான சந்திப்பு உணர்ச்சி பொங்க அமைந்தது.

இரு தலைவர்களும் இன்று ஹைத்ராபாத் ஹவுஸில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பில் நெகிழ்ச்சியுடன் கைலுக்கி வரவேற்றனர்.

18-ஆவது பிரிக்ஸ் தலைவர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்திய வெளியுறவு அமைச்சின் கீழ் செயல்படும் ஹைத்ராபாத் ஹவுஸ், வெளிநாட்டு தலைவர்களுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் அரசு விருந்துகளுக்காக பயன்படுத்தப்படும் முக்கிய இடமாகும்.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிரிக்ஸ் பங்குதாரர் நாடுகளில் ஒன்று என்ற அந்தஸ்தை மலேசியா பெற்றது. பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக அன்வார் நேற்று இந்தியா சென்றடைந்தார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.

இதனிடையே, மலேசியா - இந்தியா இடையிலான நீண்டகால உறவு 1957-ஆம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது.

அன்வாரின் முதல் இந்தியப் பயணத்தின் போது, இரு நாடுகளின் உறவு விரிவான வியூக ஒத்துழைப்பின் அடிப்படையில் உயர்த்தப்பட்டது.

2025-ஆம் ஆண்டில் இருநாடுகளுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் 79.49 பில்லியனை எட்டியுள்ள நிலையில், இந்தியா, தென்னாசிய வட்டாரத்தில் மலேசியாவின் மிகப் பெரிய வர்த்தக கூட்டாளியாகவும் தொடர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News