Sep 12, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை
உலகச் செய்திகள்

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

Share:

இந்தியாவில் நடைபெறும் 18-ஆவது பிரிக்ஸ் தலைவர்கள் உச்சி மாநாட்டின் பக்க நிகழ்வாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நேற்று இரவு சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

உள்ளூர் நேரப்படி சுமார் இரவு 11 மணியளவில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஏற்கனவே எட்டப்பட்ட ஒப்பந்தங்களை விரைவாக நடைமுறைப்படுத்த புத்ராஜெயா–மாஸ்கோ இடையே சிறப்பு ஒருங்கிணைப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற அன்வாரின் பரிந்துரைக்கும் புதின் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

மேலும், மலேசியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நேரடி விமான சேவையை விரைவாக தொடங்க வேண்டும் என்பதோடு, ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட விசா இல்லா பயண ஏற்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என அன்வார் வலியுறுத்தினார்.

இவை செயல்படுத்தப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீடு கணிசமாக அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டார். அதேபோல், மலேசிய பாமாயிலை ரஷ்யா இறக்குமதி செய்வது உள்ளிட்ட இரு நாடுகளுக்கு இடையிலான முந்தைய ஒப்பந்தங்களையும் விரைவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

Related News