இந்தோனேசியாவைச் சேர்ந்த உம்ரா யாத்ரீகர்கள் மலேசியா, சிங்கப்பூர் வழியாகப் பயணிப்பதைத் தவிர்த்து, உள்நாட்டு விமான நிறுவனங்கள் மூலம் சவூதி அரேபியாவுக்கு நேரடியாகப் பயணிக்க வேண்டும் என அந்நாட்டு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் சுமார் 70 ஆயிரம் யாத்ரீகர்கள் மலேசியா, சிங்கப்பூர் வழியாகச் செல்வதாகவும், அவர்களை இந்தோனேசிய விமான நிறுவனங்களுக்கு மாற்றுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்றும் இந்தோனேசியாவின் துணை ஹஜ் அமைச்சர் டாஹ்னில் அன்ஸார் சிமான்ஜுந்தாக் தெரிவித்துள்ளார்.
இதற்காக கருடா இந்தோனேசியா மற்றும் லயன் குழும விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளை மேம்படுத்தி, போட்டித்தன்மை வாய்ந்த கட்டணங்களை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட இந்தோனேசியாவில், ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் பேர் உம்ரா புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.








