Oct 24, 2026
Thisaigal NewsYouTube

தைவானில் சாம்பி புயல்: இரு மலேசியர்கள் காயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தைவானில் சாம்பி புயல்: இரு மலேசியர்கள் காயம்

தைவானைத் தாக்கிய சாம்பி புயலில் சிக்கி இரு மலேசியர்கள் சொற்ப காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களுக்குத் தூதரக உதவியும் வழங்கப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

தைப்பே நகரிலுள்ள மலேசிய நட்புறவு மற்றும் வர்த்தக மையம் இதனை உறுதிப்படுத்தியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது. தைவானிலுள்ள மலேசிய மாணவர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் அமைச்சு கூறியது.

மலேசியர்கள் தைவானில் வசித்தாலும் சுற்றுலா சென்றிருந்தாலும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், கடற்கரை மற்றும் மலைப்பகுதிகளைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மணிக்கு சுமார் 126 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிய புயலால் மின்தடை மற்றும் மரங்கள் சாய்ந்த சம்பவங்கள் ஏற்பட்டன. லியூசியூ தீவில் ஒருவர் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →