Oct 12, 2026
Thisaigal NewsYouTube

மலேசியா–ஜோர்டான் உறவு மேலும் வலுப்பெறும்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நம்பிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியா–ஜோர்டான் உறவு மேலும் வலுப்பெறும்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நம்பிக்கை

மலேசியாவுக்கும் ஜோர்டானுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, கல்வி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக மலேசியா வந்துள்ள ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவை வரவேற்ற மாமன்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், மலேசியாவின் ஹலால் தொழில்துறையும் ஜோர்டானின் வியூக முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடமும் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறினார். மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் குறித்த கவலையையும் தெரிவித்த மாமன்னர், பாலஸ்தீன மக்களுக்கு ஜோர்டான் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவையும் பாராட்டினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →