Oct 8, 2026
Thisaigal NewsYouTube

அன்வார், மியன்மார் அதிபர் மின் ஆங் லாயிங் சந்திப்பு - மலேசியாவிலுள்ள மியன்மார் நாட்டவர்கள் குறித்து பேச்சுவார்த்தை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அன்வார், மியன்மார் அதிபர் மின் ஆங் லாயிங் சந்திப்பு - மலேசியாவிலுள்ள மியன்மார் நாட்டவர்கள் குறித்து பேச்சுவார்த்தை

இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணமாக மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ள மியன்மார் அதிபர் மின் ஆங் லாயிங்கை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா புத்ரா வளாகத்தில் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தச் சந்திப்பின்போது, மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள மியன்மார் நாட்டினரை அவர்களது சொந்த நாட்டுக்கு மீண்டும் அனுப்புவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 10,000 மியன்மார் நாட்டினர் விமானம் மற்றும் கடல் மார்க்கமாக சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அன்வார் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

திருப்பி அனுப்பப்பட்டவர்களில் ரோஹிங்யா இனத்தவர்கள் மட்டுமின்றி அராக்கான், கரன் மற்றும் ஷான் இனத்தவர்களும் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நடவடிக்கை தொடர்பாக அன்வாரால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்று மலேசியா வந்துள்ள மியன்மார் அதிபர், இது குறித்த அடுத்தக் கட்ட நடிவடிக்கைகள் குறித்து அன்வாருடன் கலந்தாலோசித்து வருகின்றார்.

முன்னதாக, மலேசியாவில் தங்கியிருக்கும் மியன்மார் நாட்டினரில், 5,000 பேரை கட்டம் கட்டமாக மீண்டும் அழைத்துச் செல்ல மியன்மார் ஒப்புக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →