இந்தோனேசியாவில் அதிபர் பிரபோவோ சுபியந்தோ உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் தொலைபேசிகள் சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சை அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில், அதிபரின் தலைமைப் பணியாளர் லிஸ்ட் யோ சிகிட் புரபோவோ (Listyo Sigit Prabowo) உள்ளிட்ட மூன்று மூத்த போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். இதற்கிடையில், தலைநகர் ஜகார்த்தாவில் பாதுகாப்பைப் பலப்படுத்த ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
2025ஆம் ஆண்டு தொடக்கம் அதிபர், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் தொலைபேசிகள் கண்காணிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தச் செயல் அதிகார வரம்பை மீறியதுடன், நாட்டின் தலைமைத்துவப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என அதிபரின் பேச்சாளர் பிரசெட்யோ ஹாடி (Prasetyo Hadi) தெரிவித்துள்ளார்.








