Oct 26, 2026
Thisaigal NewsYouTube

சிங்கப்பூரில் ஓய்வுபெறும் வயது 65 ஆக உயர்வு: 2029 முதல் புதிய நடைமுறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிங்கப்பூரில் ஓய்வுபெறும் வயது 65 ஆக உயர்வு: 2029 முதல் புதிய நடைமுறை

சிங்கப்பூரில் சட்டபூர்வ ஓய்வுபெறும் வயது 65 ஆகவும், மறுபணியில் அமர்த்துவதற்கான வயது 70 ஆகவும் 2029 ஜனவரி 1ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட காலக்கெடுவுக்கு ஓராண்டுக்கு முன்னதாகவே இந்த மாற்றம் நடைமுறைக்கு வருகிறது.

விருப்பமுள்ள மூத்த பணியாளர்கள் தொடர்ந்து வேலை செய்வதற்கு இந்த மாற்றம் கூடுதல் உறுதியை வழங்கும் என்று மூத்தோர் வேலை வாய்ப்பு தொடர்பான முத்தரப்புப் பணிக்குழு அக்டோபர் 26ஆம் தேதி தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கடந்த ஜூலை மாதம் ஓய்வுபெறும் வயது 64 ஆகவும், மறுபணியில் அமர்த்தும் வயது 69 ஆகவும் உயர்த்தப்பட்டது. தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஆறு பரிந்துரைகள் மூலம், மூத்தோர் தொடர்ந்து பணியாற்றவும், இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வேலைக்குத் திரும்பவும் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்படும். குறைந்த ஊதியம் பெறும் மூத்த பணியாளர்களுக்கும் கூடுதல் ஆதரவு வழங்கப்படும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →