Oct 17, 2026
Thisaigal NewsYouTube

எல்லை தாண்டிய புகைமூட்டம்: இந்தோனேசியாவின் 7 நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் நோட்டீஸ்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எல்லை தாண்டிய புகைமூட்டம்: இந்தோனேசியாவின் 7 நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் நோட்டீஸ்

எல்லை தாண்டிய புகைமூட்டத்தால், காற்றின் தரம் மாசு அடையக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் இந்தோனேசியாவின் 7 நிறுவனங்களுக்கு எதிராக சிங்கப்பூர் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது.

அந்நாட்டில் பற்றி எரியும் காட்டுத் தீயை உடனடியாக அணைக்க நடவடிக்கை எடுக்குமாறு சிங்கப்பூர் சுற்றுச்சூழல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சிங்கப்பூர் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கப்பூரில் எல்லை தாண்டிய புகைமூட்டத்தை ஏற்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நிறுவனங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்படவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, இந்தோனேசியாவில் உள்ள ஏழு நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்களில் ஏற்பட்ட தீயிலிருந்து எல்லை தாண்டிய புகைமூட்டம் உருவாகியிருக்கலாம் என்றும் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தேவையான இடங்களில் எல்லை தாண்டிய புகைமூட்ட மாசுபாட்டுச் சட்டத்தின் கீழ் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் விவரித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →