Oct 10, 2026
Thisaigal NewsYouTube

எகிப்து வருமாறு மாமன்னர், பிரதமருக்கு அதிபர் அப்டேல் ஃபாத்தா எல்-சிசி அழைப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எகிப்து வருமாறு மாமன்னர், பிரதமருக்கு அதிபர் அப்டேல் ஃபாத்தா எல்-சிசி அழைப்பு

மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோரை எகிப்து நாட்டிற்கு வருகை தருமாறு அந்நாட்டு அதிபர் அப்டேல் ஃபாத்தா எல்-சிசி, அழைப்பு விடுத்துள்ளார்.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக மலேசியா வந்துள்ள அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இன்று இஸ்தானா நெகாராவில் சுல்தான் இப்ராஹிம் தனக்கு டர்ஜா உத்தாமா ஶ்ரீ மாஹ்கோத்தா நெகாரா விருது வழங்கியதற்கும் எல்-சிசி நன்றி தெரிவித்தார்.

இந்த விருது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் ஆழத்தையும் வலிமையையும் வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

புத்ராஜெயாவில் உள்ள ஶ்ரீ பெர்டானா வளாகத்தில் பிரதமர் அன்வார் இப்ராஹிமுடனான கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் எல்-சிசி இதனைத் தெரிவித்தார்.

மேலும், மலேசியா மற்றும் எகிப்து இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →