இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவுக்கு விமானம் மூலம் சுமார் 26 கிலோகிராம் தங்கத்தைக் கடத்த முயன்ற மூன்று சம்பவங்களை அந்நாட்டு சுங்கத்துறை முறியடித்துள்ளது. இதில் மலேசியர் ஒருவரும் சிக்கியுள்ளார்.
கடந்த நவம்பர் 12ஆம் தேதி, மேற்கு சுமத்ராவின் பாடாங் நகருக்கு அருகிலுள்ள மினாங்காபாவ் அனைத்துலக விமான நிலையத்தில், 34 வயது மலேசியர் ஒருவர் தனது காலணிக்குள் நான்கு கிலோகிராம் தங்கக் கட்டிகளை மறைத்து எடுத்துச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், தெற்கு கலிமந்தானில் உள்ள பஞ்சார்மாசின் விமான நிலையத்தில் நவம்பர் 5ஆம் தேதி நான்கு இந்தோனேசியப் பெண்களிடமிருந்து 4.2 கிலோகிராம் தங்கமும், நவம்பர் 12ஆம் தேதி மேலும் மூன்று பயணிகளிடமிருந்து 17.6 கிலோகிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தம் 25.8 கிலோகிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அதன் மதிப்பு சுமார் 14 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.








