Nov 13, 2026
Thisaigal NewsYouTube

உலகம் முழுவதும் மைக்ரோசாஃப் 365 சேவைகள் திடீர் முடக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
உலகம் முழுவதும் மைக்ரோசாஃப் 365 சேவைகள் திடீர் முடக்கம்

உலகம் முழுவதும் மைக்ரோசாஃப் நிறுவனத்தின் முக்கிய இணையச் சேவைகளான அவுட்லுக், மைக்ரோசாஃப் டீம்ஸ் உள்ளிட்டவை திடீரென முடங்கியதால் பயனர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மைக்ரோசாஃப் நிறுவனம், உலகின் முன்னணி மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும்.

இந்நிலையில், இன்று அதிகாலை முதல் அதன் முக்கிய சேவைகளைப் பயன்படுத்துவதில் பயனர்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

மின்னஞ்சல் சேவையான அவுட்லுக், மைக்ரோசாஃப் 365, டீம்ஸ், மைக்ரோசாஃப் ஸ்டோர் மற்றும் செயற்கை நுண்ணறிவுச் சேவையான கோபைலட் (Copilot) உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வர் கோளாறு காரணமாக இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சேவைகளை மீண்டும் வழக்கமான நிலைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மைக்ரோசாஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →