Oct 19, 2026
Thisaigal NewsYouTube

நேரலைத் திருப்பலியின்போது தலையில் விழுந்த சிலுவை – ஏகுவாடோர் பாதிரியார் உயிரிழப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நேரலைத் திருப்பலியின்போது தலையில் விழுந்த சிலுவை – ஏகுவாடோர் பாதிரியார் உயிரிழப்பு

தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில், பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள ஏகுவாடோர் நாட்டில், தேவாலயத்தில் நேரலைத் திருப்பலி நடத்திக்கொண்டிருந்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவர், சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிலுவை தலையில் விழுந்ததில் உயிரிழந்தார். ஏகுவாடோரின் அண்டை நாடுகளாக கொலம்பியாவும் பெருவும் உள்ளன.

குவாயாகுயில் நகரில் உள்ள பெர்பெதுவோ சொகோர்ரோ தேவாலயத்தில், கடந்த சனிக்கிழமை, அக்டோபர் 17ஆம் தேதி மாலை இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. திருப்பலி நேரலையாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தபோது, பாதிரியார் பட் ரிசியோ அல்ஃபிரடோ சன்சேஸ் மோலினாரியின் பின்னால் இருந்த பெரிய சிலுவை திடீரென விழுந்து அவரைத் தாக்கியது.

இந்தச் சம்பவம் தொடர்பான செய்தி அணைத்துலக ஊடகங்களில் வெளியானது. திருப்பலி நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம், தேவாலயத்தினரிடமும் பொதுமக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →