Oct 12, 2026
Thisaigal NewsYouTube

ரியாத் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் - ஒருவர் பலி, 11 பேர் காயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரியாத் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் -  ஒருவர் பலி, 11 பேர் காயம்

சவுதி அரேபியாவின் ரியாத் அனைத்துலக விமான நிலையம் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இதற்கு முந்தைய நாள் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

இந்தத் தாக்குதலானது, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில், சவுதி அரேபியாவில் நிகழ்ந்த மிக மோசமான தாக்குதலாகக் கருதப்படுகின்றது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பு, கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியதாகவும், சவுதியின் போக்குவரத்து மையங்கள் தொடர்ந்து இலக்காக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, விமான நிலையத்தில் ஏவுகணை போன்ற பொருள் விழுந்ததில் தீப்பற்றியதாகவும், மற்றொரு ஏவுகணையை வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாகவும் சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் தெரிவித்துள்ளன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →