சீனாவின் தலைநகர் Beijing-இல் உள்ள மக்கள் மாமன்ற அரங்கில், சீன துணைப் பிரதமர் டிங் ஸுவெஸியாங்கை மலேசியத் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி இன்று வியாழக்கிழமை சந்தித்தார்.
இரு தலைவர்களும் பெய்ஜிங் மற்றும் மலேசிய நேரப்படி காலை 10.10 மணியளவில் சந்தித்தனர்.
இதனைத் தொடர்ந்து இருதரப்புக் கலந்துரையாடலும் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில், சீனாவுக்கான மலேசியத் தூதர் டத்தோ நோர்மான் முஹமட் மற்றும் மலேசியப் பேராளர்களும் ஸாஹிட் ஹாமிடியுடன் கலந்து கொண்டனர்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், ஐந்து நாள் அதிகாரபூர்வப் பணிப் பயணமாக, ஸாஹிட் ஹாமிடி பெய்ஜிங் மற்றும் தியான்ஜின் நகரங்களுக்குச் சென்றுள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு, டிசம்பரில் துணைப் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர், அவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும்.
இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் மலேசியா-சீனா இடையிலான வர்த்தகம், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 35.1 விழுக்காடு அதிகரித்து 456.68 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.








