Nov 16, 2026
Thisaigal NewsYouTube

எல்லை தாண்டிய புகைமூட்டம்: மலேசியா, சிங்கப்பூரிடம் இந்தோனேசியப் பிரதமர் மன்னிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எல்லை தாண்டிய புகைமூட்டம்: மலேசியா, சிங்கப்பூரிடம் இந்தோனேசியப் பிரதமர் மன்னிப்பு

இந்தோனேசியாவில் பரவிய காட்டுத் தீயினால் அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூரைப் பாதித்துள்ள எல்லை தாண்டிய புகைமூட்டத்திற்காக அந்நாட்டு அதிபர் பிரபோவொ சுபியாந்தோ மன்னிப்புக் கோரினார்.

இந்த தீ விபத்துகளுக்குக் காரணமான நிறுவனங்கள் மீது இந்தோனேசிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.

கடந்த நான்கு மாதங்களாகத் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், இதனால் அண்டை நாடுகள் பாதிக்கப்படுவதைத் தாம் உணர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற 49-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் முழுமையான அமர்வில் பேசும்போது பிரபோவோ இதனைத் தெரிவித்தார்.

இந்த அமர்வில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், புருணை சுல்தான் சுல்தான் ஹசானால் போல்கியா உள்ளிட்ட ஆசியான் உறுப்பு நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →