Sep 11, 2026
Thisaigal NewsYouTube
பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை
உலகச் செய்திகள்

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

Share:

18-ஆவது பிரிக்ஸ் (BRICS) உச்சநிலை மாநாட்டில் பங்கேற்க இந்தியா செல்லும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

மேலும் ஈரான் அதிபர் மசூட் பெசக்கியான், கஸகஸ்தான் அதிபர் Kassym-Jomart Tokayev மற்றும் எத்தியோபியா பிரதமர் அபிய் அஹ்மெட் ஆகியோரையும் அன்வார் சந்திக்க உள்ளதாக இந்தியாவிலுள்ள மலேசிய தூதரகத்தின் துணை உயர் ஆணையர் ஷாரிஃபா எஸ்நீடா வாஃபா தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் மோடி தலைமையில் நாளை துவங்கும் பிரிக்ஸ் மாநாட்டின் கருப்பொருள் “மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மையை வலுப்படுத்துதல்” என்பதாகும்.

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீட்டு சீர்திருத்தங்களை வலுப்படுத்துவதில் இம்மாநாடு கவனம் செலுத்துகிறது.

பிரிக்ஸ் அமைப்பில் பங்காளி என்ற நிலையில் மலேசியா இம்மாநாட்டில் பங்கேற்கிறது.

நாட்டின் நிதியமைச்சருமான அன்வார், உலகளாவிய தெற்கு நாடுகளின் குரலுக்கு முக்கியத்துவம் அளித்து, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமமான உலகளாவிய அமைப்புக்கான மலேசியாவின் நிலைப்பாட்டை முன்வைக்க உள்ளார்.

Related News