Sep 4, 2026
Thisaigal NewsYouTube
3 குழந்தைகளை கொன்றதாக குற்றச்சாட்டு: அமெரிக்க தாயின் வழக்கில் தீர்ப்பு தாமதம் !
உலகச் செய்திகள்

3 குழந்தைகளை கொன்றதாக குற்றச்சாட்டு: அமெரிக்க தாயின் வழக்கில் தீர்ப்பு தாமதம் !

Share:

அமெரிக்காவில் அமைத்திருக்கும் மாசசூசெட்ஸ் மாநிலத்தில், மூன்று குழந்தைகளை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட லிண்ட்சே கிளான்சியின் வழக்கில், 12 பேர் கொண்ட நடுவர் குழுவால் இதுவரை ஒருமித்த தீர்ப்பை எட்ட முடியவில்லை.

36 வயதான கிளான்சி, தனது ஐந்து வயது மகள் கோரா, மூன்று வயது மகன் டாசன் மற்றும் எட்டு மாத குழந்தை காலனை கழுத்தை நெரித்து கொன்றதை மறுக்கவில்லை.

ஆனால், பிரசவத்திற்குப் பிறகு ஏற்பட்ட மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், குற்றப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என அவரது தரப்பு வாதிடுகிறது.

ஒரு நடுவர் சட்டத்தையும் நியாயமான சந்தேகம் தொடர்பான விளக்கத்தையும் ஏற்க மறுப்பதாக பாதுகாப்புத் தரப்பு குற்றம்சாட்டி உள்ளது.

எனினும், அந்த நடுவரை நீக்க நீதிபதி வில்லியம் சல்லிவன் மறுத்து, மீண்டும் ஆலோசிக்க உத்தரவிட்டார்.

தீர்ப்பு கிடைக்காவிட்டால், வழக்கு ரத்து செய்யப்பட்டு, புதிய நடுவர் குழுவுடன் மீண்டும் விசாரணை நடத்தப்படலாம் என குறிப்பிடத்தக்கது.

Related News