சரவாக், போர்னியோ தீவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த இந்தோனேசியா மேலும் 1,500 ராணுவ வீரர்களை களமிறக்கியுள்ளது.
ஜனவரி முதல் ஜூலை வரை ஏற்பட்ட காட்டுத் தீயில் 2 லட்சத்துக்கும் அதிகமான ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக இந்தோனேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தலைநகர் ஜகார்த்தாவின் பரப்பளவை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
போர்னியோவில் காட்டுத் தீ தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்ட அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, கூடுதல் ராணுவப் படைகளை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தீயைக் கட்டுப்படுத்தும் நீர்த் தெளிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த 6 ஹெலிகாப்டர்களும் களமிறக்கப்பட்டுள்ளன.
வறட்சியான வானிலை மற்றும் வலுவான எல் நினோ தாக்கம் காரணமாக தீ மேலும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத் தீயால் உருவான புகைமூட்டம் மலேசியாவின் போர்னியோ பகுதிக்கும் பரவியுள்ளது.இதனால் சரவாக்கில் 6 பகுதிகளில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
புகைமூட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் முகக்கவசம் அணியவும், வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








