Sep 12, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்க கோரிக்கையால் தென் கொரியா ராணுவப் பயிற்சியை குறைத்தது
உலகச் செய்திகள்

அமெரிக்க கோரிக்கையால் தென் கொரியா ராணுவப் பயிற்சியை குறைத்தது

Share:

தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் 2026ஆம் ஆண்டுக்கான உல்சி ஃப்ரீடம் ஷீல்ட் ராணுவப் பயிற்சியின் கால அளவும், செயல்பாடுகளின் அளவும் குறைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் கோரிக்கையைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை நடைபெறவிருந்த பயிற்சி, தற்போது ஆகஸ்ட் 21ஆம் தேதியே நிறைவடைகிறது. களப் பயிற்சிகளும் ஓரளவு குறைக்கப்பட உள்ளன.

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுடன் நல்லுறவைப் பேண விரும்புவதாகக் கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென் கொரியாவுடனான ராணுவப் பயிற்சிகள் செலவுமிக்கவை என்றும், அவை விரோதமான சமிக்ஞையை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், வட கொரியாவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, இந்தப் பயிற்சிகள் ஆக்கிரமிப்புப் போருக்கான ஒத்திகை என வட கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

Related News