Sep 12, 2026
Thisaigal NewsYouTube
டிரோன்களுக்கு வரி; அமெரிக்க போர்க்கப்பல்களில் பழைய தொழில்நுட்பத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என டிரம்ப் உத்தரவு
உலகச் செய்திகள்

டிரோன்களுக்கு வரி; அமெரிக்க போர்க்கப்பல்களில் பழைய தொழில்நுட்பத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என டிரம்ப் உத்தரவு

Share:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டிரோன்கள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்களுக்கு புதிய வரிகளை விதிக்கும் அறிவிப்பிலும், அமெரிக்க விமானந்தாங்கி கப்பல்களில் பழைய தொழில்நுட்பத்தை மீண்டும் பயன்படுத்தும் உத்தரவிலும் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்களில் தற்போது பயன்படுத்தப்படும் மின்காந்த விமான ஏவுதளங்கள் மற்றும் நவீன ஆயுதத் தூக்கிகளை மாற்றி, பாரம்பரிய நீராவி மற்றும் ஹைட்ராலிக் அமைப்புகளை பயன்படுத்த பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத்துக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஐந்தாவது கடற்படை கப்பல் கட்டும் தளத்தை அமைக்கவும், குறிப்பிட்ட அளவில் அமெரிக்க போர்க்கப்பல்களை வெளிநாட்டு கப்பல் கட்டும் நிறுவனங்கள் மூலம் கட்ட அனுமதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலைக் காரணம் காட்டி, சில டிரோன்களுக்கு 100 சதவீதம் வரையும், சிறிய டிரோன்களுக்கு 25 சதவீதம் வரையும் புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிகள் கையெழுத்திட்ட 21 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வரும்.

Related News

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

மெக்சிகோவில் பட்டாசு வெடிவிபத்து: 10 பேர் பலி; 60 பேர் காயம்

மெக்சிகோவில் பட்டாசு வெடிவிபத்து: 10 பேர் பலி; 60 பேர் காயம்

நேபாளத்தில் வெள்ளப் பேரழிவு: 13-ஆம் நாள் துக்க அனுசரிப்பு

நேபாளத்தில் வெள்ளப் பேரழிவு: 13-ஆம் நாள் துக்க அனுசரிப்பு

நேபாள பேரிடர்: ஹெலிகாப்டர் மூலம் தேடியும் 17 மலேசியர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை

நேபாள பேரிடர்: ஹெலிகாப்டர் மூலம் தேடியும் 17 மலேசியர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோருடன் அன்வார் கலந்துரையாடல்: புகைமூட்டம், காலநிலை நெருக்கடி குறித்து ஆலோசனை

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோருடன் அன்வார் கலந்துரையாடல்: புகைமூட்டம், காலநிலை நெருக்கடி குறித்து ஆலோசனை