Sep 23, 2026
Thisaigal NewsYouTube
தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்:  பணத்தை பாதுகாக்க சென்ற  2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு
உலகச் செய்திகள்

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்: பணத்தை பாதுகாக்க சென்ற 2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

Share:

ஜப்பானின் குமமோட்டோவில் உள்ள ஏயோன் பேரங்காடி மையத்தில் நிலநடுக்கத்துக்குப் பிறகு ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த இரு பெண்கள், முதலில் பாதுகாப்பாக வெளியேறியிருந்த போதிலும், பணத்தை பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்க மீண்டும் உள்ளே செல்லுமாறு உத்தரவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த உத்தரவை வழங்கியதை ஹபிட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டு, உயிரிழந்தோரின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வெடிவிபத்தில், அந்த இரு பெண் ஊழியர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

இந்த உத்தரவு பொருத்தமற்றது என்றும், அதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாக நிறுவனத்தின் விற்பனை மேலாளர் கோஜி யூசே தெரிவித்துள்ளார்.

இதுவரை நிலநடுக்கத்தால் 36 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இரண்டு உயிரிழப்புகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related News