Sep 22, 2026
Thisaigal NewsYouTube
அன்வார் மூன்று நாள் பயணமாக ஷாங்காய் சென்றடைந்தார்
உலகச் செய்திகள்

அன்வார் மூன்று நாள் பயணமாக ஷாங்காய் சென்றடைந்தார்

Share:

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மலேசியா-சீனா உறவை வலுப்படுத்தவும், வர்த்தகத்தை அதிகரிக்கவும், வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் மூன்று நாள் பணிப் பயணமாக சீனாவின் ஷாங்காய் சென்றடைந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை மாலை 5.10 மணிக்கு ஷாங்காய் ஹொங்கியாவ் அனைத்துலக விமான நிலையத்தைச் சென்றடைந்த அவரை, சீனாவுக்கான மலேசியத் தூதர் டத்தோ நோர்மான் முஹமட் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இந்தப் பயணத்தில் பிரதமருடன் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக், உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

ஷாங்காயில் நடைபெறும் வோர்ல்ட்ஸ்கில்ஸ் ஷாங்காய் மாநாட்டில் உரையாற்றும் பிரதமர், ஹாங்ஸாவில் சீனப் பிரதமர் லீ கியாங்குடனான உயர்மட்ட இருதரப்பு சந்திப்பிலும் பங்கேற்கிறார்.

Related News