மால்டிவ்ஸுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான குறுகிய கால நாணய பரிமாற்ற வசதியை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்க மலேசியா சம்மதம் தெரிவித்துள்ளதற்கு அந்நாட்டு அதிபர் முஹமட் நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், மால்டிவ்ஸுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு மேலும் வலுப்படும் என முய்ஸூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், பிடிஏ எனப்படும் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு கொள்கையளவில் மலேசியா ஒப்புக் கொண்டதையும் அவர் வரவேற்றுள்ளார்.
இந்த இரு நடவடிக்கைகளும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளின் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என முய்ஸூ குறிப்பிட்டுள்ளார்.








