Sep 14, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா–கேரளா இடையே பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய வாய்ப்புகள்
உலகச் செய்திகள்

மலேசியா–கேரளா இடையே பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய வாய்ப்புகள்

Share:

மலேசியாவும், இந்தியாவின் கேரள மாநிலமும் டிஜிட்டல் பொருளாதாரம், சுகாதாரம், சுற்றுலா மற்றும் கல்வி உள்ளிட்ட உயர் மதிப்பு துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளன.

இதன் மூலம் வர்த்தகம், முதலீடு மற்றும் வர்த்தகக் கூட்டாண்மைகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்க இரு தரப்பும் முனைப்புக் காட்டுகின்றன.

இந்திய பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், கேராளவிற்குப் பயணம் மேற்கொண்டு அங்கு அம்மாநில முதல்வர் வி.டி சத்தீசனைச் சந்தித்த போது, மலேசியா–கேரளா இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தினார்.

குறிப்பாக டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சுகாதாரத் துறைகளில் கேரளாவின் திறன்களையும், திறமையான பணியாளர்களையும் பயன்படுத்தி புதிய கூட்டாண்மைகளை உருவாக்குவது குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.

மேலும், கல்வி, சுற்றுலா, வர்த்தகம் மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்களை விரிவுபடுத்துவது குறித்தும் இரு தரப்பும் ஆராய்ந்தன. அரசு மற்றும் தொழில்துறை நிறுவனங்களுக்கு இடையிலான நெருக்கமான தொடர்புகள் மூலம் முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, கேரள முதல்வர் வி.டி சத்தீசனை மலேசியாவுக்கு வருமாறு அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தப் பயணத்தின் மூலம் கேரள அரசு மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகள் மலேசிய நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை அமைப்புகளுடன் நேரடியாக கலந்துரையாடி, புதிய ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை அடையாளம் காண முடியும் என நம்பப்படுகின்றது.

Related News