ஹாங் காங் அனைத்துலக விமான நிலையத்தில் சுமார் 8 கிலோ கஞ்சாவுடன் 33 வயதான மலேசியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 1.6 மில்லியன் ஹாங்காங் டாலர்கள், அதாவது மலேசிய மதிப்பில் 8 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஹாங் காங் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவரது பயணப் பொதிக்குள் சுமார் 8 கிலோ சந்தேகத்திற்கிடமான கஞ்சா மொட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
அந்தப் பெண் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி தாய்லாந்தின் பாங்கோக் நகரிலிருந்து ஹாங் காங் வந்ததாக அந்நாட்டு சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.








