Sep 13, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை
உலகச் செய்திகள்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

Share:

தாய்லாந்திற்கு வரும் அனைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமும் 450 பாட், மலேசிய மதிப்பில் சுமார் 55 ரிங்கிட் சுற்றுலா கட்டணம் வசூலிக்கும் திட்டம் குறித்து அந்நாட்டு அரசாங்கம் பொதுமக்களிடம் கருத்து கேட்டு வருகின்றது.

இந்தக் கருத்துக் கேட்பு நடவடிக்கையானது வரும் செப்டம்பர் 28 வரை நடைபெறவுள்ளது.

இத்திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தால், வரும் 2027-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கட்டணம் வசூலிக்கத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

விமானம், தரை அல்லது கடல் வழியாக வரும் அனைத்து வெளிநாட்டினருக்கும் ஒரே கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிடைக்கும் நிதியானது சுற்றுலா உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Related News

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை