பேரிடர் மேலாண்மை, காட்டுத் தீ தடுப்பு, ஹலால் தொழில் மற்றும் கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் மலேசியா இந்தோனேசியா இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி இந்தோனேசியாவின் ஜகார்த்தா சென்றடைந்துள்ளார்.
அங்கு இது தொடர்பாக இந்தோனேசிய துணை அதிபர் ஜிப்ரான் ராகாபுமிங் ராகாவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மேலும், கிராமப்புற மேம்பாட்டில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் இரு நாடுகளும் கையெழுத்திட உள்ளன.
இந்த நான்கு நாள் பயணத்தின் போது 5-வது ஹாலால் 20 மாநாட்டின் தொடக்க விழாவிலும் ஸாஹிட் ஹாமிடி பங்கேற்கிறார்.
இதனிடையே, கடந்த 2025-ஆம் ஆண்டில் மலேசியா இந்தோனேசியா இடையிலான இருதரப்பு வர்த்தகம் 24.22 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.








