Sep 21, 2026
Thisaigal NewsYouTube
இறந்துவிட்டார் எனக் கருதி சவப்பெட்டியில் வைத்த பெண்… மறுநாள் கண் திறந்த அதிசயம்
உலகச் செய்திகள்

இறந்துவிட்டார் எனக் கருதி சவப்பெட்டியில் வைத்த பெண்… மறுநாள் கண் திறந்த அதிசயம்

Share:

சீனாவில் இறந்துவிட்டதாகக் கருதி குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்ட 70 வயதுக்கும் மேற்பட்ட பெண், மறுநாள் அதற்குள் இருந்து மெல்லிய முனகல் சத்தம் எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹெபெய் மாநிலத்தைச் சேர்ந்த அந்தப் பெண், பல ஆண்டுகளாக மூளையில் இரத்த உறைவு பிரச்சினையாலும், புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.

புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, குடும்பத்தினர் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி அவரிடம் உயிர் அறிகுறிகள் எதுவும் தென்படாததால், வெளியூரில் இருந்த உறவினர்கள் திரும்பி வரும்வரை உடலைப் பாதுகாக்க குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியில் வைத்தனர்.

ஆனால் மறுநாள் மாலை, சவப்பெட்டிக்குள் இருந்து மெல்லிய முனகல் சத்தம் கேட்கவே, அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை வெளியே எடுத்தனர்.

செப்டம்பர் 11-ஆம் தேதி உறவினர்கள் வந்தபோது, அந்தப் பெண் கண்களைத் திறக்க முடிந்ததுடன், சுயநினைவையும் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், அவரால் உணவு அல்லது தண்ணீர் உட்கொள்ள முடியவில்லை.

அன்றிரவே அவர் மீண்டும் உயிரிழந்தார். செப்டம்பர் 13-ஆம் தேதி அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது.

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, மிகவும் குறைந்த அளவில் உயிரியல் செயல்பாடுகள் காணப்படும் “தோற்றத்தில் மரணம்” எனப்படும் நிலை இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்தும் விவாதம் எழுந்துள்ளது.

Related News

தேர்வில் சேட்ஜிபிடி பயன்படுத்திய மாணவர் மரணம்; ஐஐடி பாம்பேவில் 400-க்கும் மேற்பட்டோர் போராட்டம்

தேர்வில் சேட்ஜிபிடி பயன்படுத்திய மாணவர் மரணம்; ஐஐடி பாம்பேவில் 400-க்கும் மேற்பட்டோர் போராட்டம்

இந்தோனேசிய காட்டுத்தீ; மலேசியாவின் விமானம், 3 ஹெலிகாப்டர்கள் உதவியை வரவேற்றார் பிரபோவோ

இந்தோனேசிய காட்டுத்தீ; மலேசியாவின் விமானம், 3 ஹெலிகாப்டர்கள் உதவியை வரவேற்றார் பிரபோவோ

100 அமெரிக்க டாலர் பரிசீலனை: அன்வாருக்கு மால்டிவ்ஸ் அதிபர் நன்றி

100 அமெரிக்க டாலர் பரிசீலனை: அன்வாருக்கு மால்டிவ்ஸ் அதிபர் நன்றி

இந்தோனேசிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த விமானம் உள்ளிட்ட உதவிகளை வழங்க மலேசியா முன்வந்தது

இந்தோனேசிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த விமானம் உள்ளிட்ட உதவிகளை வழங்க மலேசியா முன்வந்தது

மலேசியா - இந்தோனேசியா ஒத்துழைப்பை வலுப்படுத்த ஸாஹிட் ஹாமிடி ஜகார்த்தா பயணம்

மலேசியா - இந்தோனேசியா ஒத்துழைப்பை வலுப்படுத்த ஸாஹிட் ஹாமிடி ஜகார்த்தா பயணம்

மாலத்தீவின் 100 மில்லியன் அமெரிக்க டாலர் 'மென் கடன்' கோரிக்கைக்கு மலேசியா சம்மதம்: பிரதமர் அன்வார் அறிவிப்பு

மாலத்தீவின் 100 மில்லியன் அமெரிக்க டாலர் 'மென் கடன்' கோரிக்கைக்கு மலேசியா சம்மதம்: பிரதமர் அன்வார் அறிவிப்பு