Sep 12, 2026
Thisaigal NewsYouTube
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்
உலகச் செய்திகள்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

Share:

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 164 பேர் உயிரிழந்துள்ளனர். பல மாடிக் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன், வீடுகள் உள்ளிட்ட பல கட்டிடங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

காலி நகரில் மட்டும் 85 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரெய்ரா நகரில் 66 பேரும், சோகோ மாநிலத்தில் 13 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, காலி நகரில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அங்கு கூடுதலாக 1,000 பாதுகாப்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளதுடன், மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related News