Sep 23, 2026
Thisaigal NewsYouTube
லேண்டிங் கியர் கோளாறு: பிலிப்பைன்ஸில் ஏர்ஏசியா விமானம் அவசரமாக ரத்து!
உலகச் செய்திகள்

லேண்டிங் கியர் கோளாறு: பிலிப்பைன்ஸில் ஏர்ஏசியா விமானம் அவசரமாக ரத்து!

Share:

தக்லோபான் சிட்டி, ஆகஸ்ட்.01-

பிலிப்பைன்ஸின் Tacloban நகரிலிருந்து மணிலா செல்லவிருந்த ஏர்ஏசியா விமானம், புறப்படுவதற்கு முன் லேண்டிங் கியரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று சனிக்கிழமை காலை ரத்து செய்யப்பட்டது. இதனால் Daniel Z. Romualdez விமான நிலையத்தின் ஓடுதளத்தில் விமானம் நிறுத்தப்பட்டதால், பிற விமானச் சேவைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டன.

காலை 9:45 மணியளவில் பாதிக்கப்பட்ட விமானம் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, விமான நிலையச் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பின. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஏர்ஏசியா நிறுவனம் மாற்றுப் பயண ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளது.

Related News