Sep 6, 2026
Thisaigal NewsYouTube
பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்
உலகச் செய்திகள்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

Share:

தாய்லாந்தின் பாங்காக் நகரிலுள்ள பள்ளி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் ஏற்கெனவே துப்பாக்கிகளை பயன்படுத்துவது குறித்து ஆர்வம் காட்டியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அச்சிறுவனிடம் இருந்த காற்றுத் துப்பாக்கி ஒன்றை ஆசிரியர் பறிமுதல் செய்திருந்ததாகவும், இணையத்தில் வன்முறை தொடர்பான காணொளிகளை அவன் பார்த்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சமூக ஊடகங்கள் மூலம் துப்பாக்கியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து அவன் கற்றுக் கொண்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளிகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த புதிய பாதுகாப்பு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என தாய்லாந்து அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

Related News